SHARE

பாதுகாப்பு படையினருக்கு அதிஉயர் பயன்களை பெற்றுக்கொடுப்பதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தீர்மானித்துள்ளார். அமைச்சரவை அங்கீகாரம் பெற்றதன் பின்னர் குறித்த பிரதிலாபங்களை உடனடியாக பாதுகாப்பு படையினருக்கு பெற்றுக்கொடுக்கப்படுமென, ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் அல்லாத வேறு காரணங்கள மற்றும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கடமையில் இருந்தபோது உயிர்நீத்த மற்றும் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கும், யுத்தம் இடம்பெறாத பகுதிகளில் கடமையில் இருந்தபோது, உயிர்நீத்த மற்றும் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கும் மாதாந்த சம்பளத்தையும், கொடுப்பனவொன்றையும் வழங்க, ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார். அத்துடன் இராணுவத்தை விட்டுச்சென்ற இராணுவ வீரர்கள் 55 வயதை பூர்த்தியான போது, சேவைக்கால ஓய்வூதியத்தை 85 சதவீதமாக சீர்த்திருத்தி இழந்துள்ள ஓய்வூதியத்தை மீண்டும் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார். யுத்தத்தின்போது ஊனமுற்ற சேவைக்காலம் 10 தொடக்கம் 12 ஆண்டுகளை விட குறைவாக உள்ளவர்கள் ஓய்வுபெற்று அல்லது வெளியேறிய அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களில் உள்ளோர் இழந்துள்ள ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குவதற்கும், ஜனாதிபதி யோசனை தெரிவித்துள்ளார். தொண்டர் படைகளில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அல்லது உயிரிழந்து தொடர்ந்தும் ஓய்வூதிய சம்பளத்திற்கு பங்களிப்பை செலுத்த விரும்பாத ஓய்வுபெற்றவர்களின் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மீண்டும் அங்கத்துவத்தை வழங்கி அதன் நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கு விரும்புவர்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர், முப்படையினருக்கு 5 கட்டங்களாக சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அரச சேவையில் நிறைவேற்று தர அதிகாரிகளுக்கு வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு, கடந்த ஆண்டு பெப்ரவரி மூன்றாம் திகதி முதல் லெப்டினன்ட் கேர்ணல் தரத்திற்கு பதவி உயர்வு வழங்கபப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ சேவையில் உள்ள சட்டத்துறை அதிகாரிகளுக்கும் 15 ஆயிரம் ரூபா தொழில்சார் கொடுப்பனவை இவ்வாண்டு ஜூலை முதலாம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY