SHARE

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்பாக ”ஜனாதிபதி தாத்தா” எனும் நூலை அவரது புதல்வி சத்துரிகா சிறிசேன எழுதியுள்ளார்.இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்த சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதையை உள்ளடக்கியதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.எதிர்வரும் 15ஆம் திகதி காலை 7.30க்கு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்த இந்நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.தமது தந்தை பிரதேச அரசியலிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் வரை அவரது பயணம் தொடர்பாக அவரது சிரேஷ்ட புதல்வி சத்துரிகா சிறிசேன தனது அனுபவங்களை உள்ளடக்கியதாக இந்நூலை எமுதியுள்ளார்.

LEAVE A REPLY