SHARE

ஊழல் மோசடிகள், துஷ்பிரயோகங்கள், வீண்விரயம் என்பன அதிகமாக காணப்பட்ட காலமொன்று இருந்தது.அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி மாற்றமொன்றை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் போது பிரச்சினைகளும் பல இடையூறுகளும் வருகின்றன.ஆனாலும் படிப்படியாக மாற்றத்தை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்டுகின்றன என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மஹாவெலி எச் வலயத்திலுள்ள 6200 பேருக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் பேசிய ஜனாதிபதி எவ்வாறான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எங்கள் மீது மேற்கொள்ளப்பட்டாலும் சரியான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதில் வெற்றியடைகிறோம் என தெரிவித்தார்.

LEAVE A REPLY