SHARE

சிரியாவிலுள்ள அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க கூடாதென பிரான்ஸ் எமானுவெல் மக்ரோன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து அமெரிக்க படைகளை சிரியாவில் நிலைகொள்ளச செய்யுமாறு அவர் டிரம்பிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் சிரியாவிலுள்ள அமெரிக்க படைகளை விரைவில் வாபஸ் வாங்க போவதாக தெரிவித்தார். சிரியாவின் கிழக்கு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்;ட அமெரிக்க படைகள் நிலைகொண்டுள்ளன. வெள்ளை மாளிகை பேச்சாளர் சார சென்ரஸ் அமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானத்தில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்தார்.

LEAVE A REPLY