SHARE

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மற்றும் பரத்பூரில் பெய்த அடை மழையை தொடர்ந்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நேற்றிரவு இம்மாவட்டங்களில் பெய்த கன மழையை  தொடர்ந்து வீதியெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தோல்பூரில் 7 பேரும் பரத்பூரில் 5 பேரும் உயிரிழந்தனர். ஆக்ரா மற்றும் தோல்பூருக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த சீரற்ற காலநிலை எதிர்வரும் ஞாயிற்று கிழமை வரை தொடருமென  அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY