SHARE

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவிடமிருந்த கணக்கில் வராத ஆயிரத்து 430கோடி இந்திய ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய வருமானவரி அதிகாரிகள் 5 நாட்களாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னரே இப்பணம் மீட்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு மற்றும் ஆந்திர மானிலங்களில் வௌ;வேறு பிரதேசங்களிலிருந்த 187 இடங்களில் சொத்துக்கள் வைப்பிலிடப்பட்டுள்ளன. சசிகலா மற்றும் அவரது சகோதரரான வி.கே..திவாகரன் ஆகியோரிடமே கணக்கில் காட்டப்படாத அதிகளவான பணம் இருந்தது.  இதற்கான வருமான வரியும் செலுத்தப்படவில்லையென இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேநேரத்தில் இவ்வளவு பெருந்தொகையான பணம் எங்கிருந்து வந்ததெனவும் அவர்களால் தெளிவுப்படுத்த முடியவில்லை. இது தொடர்பான விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெறுமதிமிக்க மாணிக்க கற்களும் தங்கங்களும் இந்த சொத்தில் அடங்குகின்றது.

LEAVE A REPLY