SHARE

லிபிய கரையோர பாதுகாப்பு படையினரால் மத்திய தரை கடலில் வைத்து 75 குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 75 பேரில் 19 பெண்களும் 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்குவதற்காக லிபியாவின் தலைநகரான திரிப்போலி கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். திரிப்போலி நகரிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கரையோர நகரமான சப்ராதா ஆட்கடத்தலுக்கு பேர்போன இடமாகும்.  உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளின் கண்காணிப்பு மற்றும் உத்தரவுகளை மீறி இங்கிருந்து ஆட்கள் கடத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY