SHARE

ஸ்பெயினிலிருந்து பிரிவது தொடர்பாக 5 நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு கெட்டலோனியா மாநில தலைவருக்கு ஸ்பெயின் பிரதமர் காலவகாசம் வழங்கியுள்ளார். கெட்டலோனியா மாநிலம் தனிநாடாக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த முதலாம் திகதி நடைபெற்றது. இதற்கு ஆதரவாக 90 வீதமானோர் வாக்களித்தனர. நேற்று கெட்டலோனியா பாராளுமன்றத்தில் பேசிய ஸ்பெயின் பிரதமர் தனிநாடாக பிரிவது குறித்து 5 நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 10 மணிக்குள் தனது முடிவை அறிவிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இக்காலப்பகுதிக்குள் கெட்டலோனியா சுதந்திர பிரகடனத்தை மேற்கொள்ளாவிட்டால் அம்மாநிலத்தின் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு சென்று விடும் என வெளிநாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இவ்வாறுஇ ருக்க இன்று ஸ்பெயினின் தேசிய தினமாகும். 40 வருடகால ஜனநாயக விழுமியங்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY