SHARE

தமது நாட்டிற்கு எதிராக தடை விதிப்பதில் ஐநாவில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றியதன் காரணமாக அமெரிக்காவிற்கும் கடும் அழுத்தங்கள் ஏற்படலாம் என வடகொரியா எச்சரித்துள்ளது. ஐநாவுக்கான வடகொரியா பிரதிநிதி ஹன் டே சொன் தனது நாட்டிற்கு எதிராக தடை விதிக்க கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். தடை விதிக்கும் தீர்மானம் சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய தடைகளின் காரணமாக வடகொரியாவிற்கு ஆடைகள் ஏற்றுமதி தடை செய்யப்படுவதுடன், அந்நாட்டிற்கான மசக்கு எண்ணெய் ஏற்றுமதி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறும். வடகொரியா அண்மையில் மேற்கொண்ட அணுவாயுத சோதனைகளின் காரணமாகவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டது. அண்மையில் வடகொரியா ஆறாவதும் மிகப்பெரியதுமான அணுகுண்டு சோதனையை நடததியது. வடகொரியாவிற்கு எதிராக ஒன்பதாவது தடவையாக இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY