SHARE

குரங்குகளுடன் எடுக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற செல்பி படங்களின் சட்ட ரீதியான உரிமை டேவிட் சிலட்டர் எனும் புகைப்பட கலைஞருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படங்களின் உரிமை அவருக்கு அன்றி அந்த குரங்குகளுக்கே வழங்கப்படவேண்டுமென குற்றம் சாற்றி விலங்குகள் அமைப்புக்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளன. 2011ஆம் ஆண்டு இந்தோனேஷிய காட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் உரிமை புகைப்பட கலைஞருக்கே உண்டு என இந்தோனேஷிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் இப்புகைப்படங்களில் இருந்து வருமானம் கிடைக்கப்பெற்றால் அதில் 25 சதவீதம் அந்த குரங்குகளின் முன்னேற்றத்திற்காக வழங்க தயார் என புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளார். குரங்குகளுடன் புகைப்படம் எடுப்பதற்காக தனக்கு அந்த விலங்குகளின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டதாகவும் புகைப்பட கலைஞர் தெரிவித்தார்.

LEAVE A REPLY