SHARE

உலகில் வாழும் அகதி சிறார்களுள் அரைவாசிபேர் பாடசாலை கல்வியை தொடரவில்லையென ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. 3.5 மில்லியன் சிறார்கள் பாடசாலை செல்லவில்லையென ஐநா அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பாடசாலை செல்வதற்கான வசதிகள் முகாம்களில் இல்லையென்றும் போதிய உதவிகள் கிடைப்பது இல்லையென்றும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஐநா அகதிகளுக்கான அமைப்பின் உதவி பெற்று வரும் 5 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட சிறார்களுள் 6.4 மில்லியன் சிறார்களுள் பெரும்பாலானோர் பாடசாலை செல்வதில்லை. இவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அறிக்கைககள் தெரிவிக்கின்றன. ஐநா அகதிகளுக்கான அமைப்பின் கீழ் அகதி முகாம்களில் வாழும் 17.2 மில்லியன் அகதிகளுள் அரைவாசிபேர் சிறுவர்கள் ஆவர்.

LEAVE A REPLY