SHARE

கென்யா அதிபர் கென்யட்டா வின்  பதவிக்காலம் முடிவடைந்ததை யொட்டி அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அதிபர் கென்யட்டா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் ரெய்லா ஒடிங்கா களம் இறங்கினார்.

இதனையடுத்து நடந்த தேர்தலில்  அதிபர் கென்யட்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர் 54.3 சதவீதம் வாக்குகளும், ஒடிங்காவுக்கு 44.7 சதவீதம் வாக்குகளும் கிடைத்தன.

இதை எதிர்க்கட்சி வேட்பாளர் ஒடிங்கா ஏற்கவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறினார். அதை தொடர்ந்து கென்யா தலைநகர் நைரோபி, கிசுமு, கிபேரா உள்ளிட்ட பல நகரங்களில் கலவரம் மூண்டது. தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. கலவரத்தை அடக்கும் பணியில் இராணுவமும், மற்றும் பொலிஸார் ஈடுபட்டனர். நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி அதிபர் கென்யட்டா வேண்டுகோள் விடுத்தார்.

அதை தொடர்ந்து கலவரம் கட்டுக்குள் அடங்கியது. எனவே கென்யட்டா வெற்றி பெற்றதாக தேர்தல் கமி‌ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  எனவே மீண்டும் கென்யா அதிபராக கென்யட்டா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY