SHARE

இந்திய ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனத்தா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ராம்நாத் கோவின் முன்னிலை வகிப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பாரதிய ஜனத்தா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ராம்நாத் கோவினும், எதிர்கட்சியை பிரநிதிதித்துவப்படுத்தி மீராகுமாரும் போட்டியிட்டனர். இன்று முற்பகல் பத்து மணியளவில் வாக்கெடுப்பு ஆரம்பமானதுடன், பிற்பகல் 5 மணிக்கு வாக்கெடுப்பு நிறைவடைந்தது. 4896 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது. தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 20ஆம் திகதி வெளியிடப்படும். இதில் வெற்றியீட்டுபவருக்கு எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார். 2012ஆம் ஆண்டு முதல் பிரனாப் முகர்ஜி இந்திய ஜனாதிபதியாக செயற்பட்டார்.

LEAVE A REPLY