SHARE

வடகொரியா மற்றும் தென்கொரிய அதிகாரிகளுக்கு இடையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இரு நாடுகளின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். எல்லைகளுக்கு இடையில் இடம்பெறும் யுத்த செயல்பாடுகளை நிறுத்துவது இப்பேச்சுவாரத்தையின பிரதான நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் வட கொரிய ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 1915 ஆம் ஆண்டிலேயே வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் இறுதியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

LEAVE A REPLY