SHARE

சீனச் செயற்பாட்டளரும், நோபல் பரிசுப் பெற்றவருமான லியு சியாவ்போ உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சீனாவின் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த லியு சியாவ்போ கல்லீரல் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமையன்று இறந்தார். சீன அரசின் பிரபலமான விமர்சகராக இருந்து வந்தார்.

லியு சியாவ்போவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவருடைய மனைவி லியு சியா சீன அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், லியு சியாவ்போவுக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்ட நகரான ஷென்யாங்கில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், அவருடைய மனைவி லியு சியா கலந்து கொண்டார்.

“உள்ளூர் பழக்கவழக்கப்படியும், குடும்பத்தினரின் விருப்பப்படியும்” லியு சியாவ்போவின் உடல் எரியூட்டப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.


BBC

LEAVE A REPLY