SHARE

வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுக்கு எதிராக 2 வது நாளாகவும் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது. நேற்றைய தினம் வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு ஜனாதிபதியின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு முரணானவையென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கும் அதேவேளை அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமானதென அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் ஆர்ப்பாட்டமானது அமெரிக்காவின் உதவியுடன் ஒரு குழுவினால் மேற்கொள்ளப்படுவதாக நிக்கலொஸ் மதுரோவிற்கு சார்பான குழுக்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY