SHARE

ஈரானின் ஆத்திரமூட்டும் செயல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளக பிரச்சினைகள் ஏற்படலாமென அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் கிலர்ஸன் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றொரு வடகொரியாவாக மாறலாமென அவர் எச்சரித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான இணக்கப்பாடு ஏற்பட்ட போதும் ஈரான் அதனை மீறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ரெக் கிலர்ஸனின் இக்கருத்து தொடர்பில் ஈரான் எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லை. ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மேற்கு நாடுகள் இதனை கடுமையாக கண்டனம் செய்து வருகின்றன.

LEAVE A REPLY