SHARE

வடகொரியாவின் அணு ஆயுத செயல்பாடுகள் தொடர்பாக அதீத கவனம் செலுத்தி வருவதாக சீனா தெரிவித்துள்ளது. தமது நாடு அடிக்கடி அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடபோவதாக வடகொரியா பிரதி வெளிவிவகார அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்கா தமது நாட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டால் அதற்கு பதிலடி கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார். இவ் அறிவிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் தமது அரசாங்கம் வடகொரியாவின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்குமெனவும் அவர் கூறியுள்ளார்;.

LEAVE A REPLY