SHARE

லெபனான் வரவு செலவு திட்டத்தில் நிலவும் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் துண்டு விழும் தொகையை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிராக அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. லெபனானின் தலைநகர் பெய்ருட்டில் ஒன்று திரண்டு மக்கள் அந்நாட்டு ஊழல் அரசியல் வாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ங்களை மேற்கொள்வதுடன் தாங்கள் வரிகளை செலுத்த போவதில்லையென்றும் தெரிவித்தனர். இம்மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் சாத் அல் அரீரி ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். குழுவொன்றை அமைத்து பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஒத்துழைக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

LEAVE A REPLY