SHARE

சிரியாவின் தலைநகரான டமஸ்கஸில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. தீவிரவாதிகளால் ஜோபா மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து டமஸ்கஸ் நகரிலும் பீறங்கிகள் மற்றும் செல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஞாயிறன்று கார் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்காக சுரங்க பாதையொன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. சிரிய படைகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. டமஸ்கஸ் நகர் மீது மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து அங்குள்ள அபாசித் சதுக்கத்திற்கு செல்லும் பாதை இராணுவத்தினால் மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY