SHARE

பிரான்சில் பொலிஸாருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பிரான்சின் தலைநகரான பெரிஸில் அணி திரண்ட மக்கள் பொலிஸாரின் வன்முறை போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்ஸ் பொலிஸார் கறுப்பின மக்களுக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக மிக மோசமாக நடந்து கொள்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சுமத்தினர். கறுப்பின மக்களுக்கும் பிரான்ஸில் வாழும் சிறுபான்மை மக்களுக்கும் எதிராக பிரான்ஸ் பொலிஸார் மோசமாக நடவடிக்கைளை மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளையும், நீரையும் பீச்சடித்தனர்.

LEAVE A REPLY