SHARE

பல நாடுகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் வடகொரியா புதிய ரொக்கட் என்ஜின் ஒன்றை பரீட்சித்துள்ளது.புதிய பரீட்சிப்பு தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள வடகொரிய தலைவர் கிம்ஜொங்உன் இது தமது நாட்டின் ரொக்கட் தொழிநுட்பத்தின் புதிய வடிவம் என தெரிவித்துள்ளார். புதிய ரொக்கட் என்ஜின்கள் மூலம் உயர்ரக செய்மதிகளை எடுத்துச்செல்ல முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். வடகொரியா மிக விரைவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரீட்சிக்கவுள்ளதாகவும் வடகொரிய தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேநேரம் சீனாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் கிளசன் இப்பரீட்சிப்பு தொடர்பாக சீன ஜனாதிபதி சீஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY