SHARE

வடகொரியாவின் செயல்பாடுகள் எல்லை மீறியுள்ளதாகவும் தேவைப்பட்டால் அந்நாட்டுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தயார் எனவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டிலேசன் எச்சரித்துள்ளார்.

தென்கொரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் இவ்வாறு வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியா ஆயுதம் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முணைந்தால் அதற்கு பதிலளிக்க அமெரிக்காவும் தயாராகவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ரெக் டிலேசனின் இவ்விஜயத்தை தொடர்ந்து தென்கொரியாவில் அமெரிக்க ஏவுகணை தளம் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY