SHARE

நியூசிலாந்தின் கிரைஸ்சேர்ச் நகரில் பரவி வரும் காட்டு தீ காரணமாக ஆயிரத்திற்கும் கூடுதலானோரை வீடுகளிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் மூன்றாவது மிகப்பெரிய நகரமாக காணப்படுகின்ற கிரைஸ்சேர்ச்சில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் விஸ்தீரனமுள்ள நிலப்பரப்பில் காட்டு தீ பரவியுள்ளது. வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காட்டு தீயை அணைப்பதற்கு நூற்றுக்கும் கூடுதலான தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY