SHARE

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள தர்கா ஒன்றிற்கு அருகில் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என  செய்திகள் வெளியாகின்றன.

சிந்து மாகாணத்தில் சேவான் நகரில் உள்ள லால் ஷபாஸ் குல்லந்தர் தர்கா அருகில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. பிரதமர் நவாப் ஷெரிஃப் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மேலும் பாகிஸ்தான் மக்களை “ஒற்றுமையாக இருக்குமாறு” வலியுறுத்தியுள்ளார்.

தற்கொலை குண்டு தாக்குதல்தாரி, தர்காவிற்குள் நுழைந்து வழிப்பாட்டாளர்களுடன் , குண்டை வெடிக்கச் செய்துவிட்டார் என்று மாகாணத்தின் பொலிஸ்  செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தர்கா பாகிஸ்தானில் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது மேலும் வியாழக்கிழமை முஸ்லிம் மக்களுக்கு புனிதமான நாளாக கருதப்படுவதால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

LEAVE A REPLY