SHARE

நுவரெலியா கிரேண்ட் ஹோட்டல் பூங்காவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்ட கேக் ஒன்றை வெட்டும் வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உருளைக்கிழங்கை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட இக் கேக், சொக்லட் பொட்டேடோ கேக் என அழைக்கப்பட்டது. இக் கேக் 111 மீற்றர் நீளத்தையும் 380 கிலோ எடையையும் கொண்டதாக தயாரிக்கப்பட்டிருந்தது. இதற்காக 75 கிலோ உருளைக்கிழங்கு 25 கிலோ உருளைக்கிழங்கு மா, 70 கிலோ சீனி, 40 கிலோ சொக்லெட், 900 முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இக் கேக் 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஈஸ்ட் ரெஸ்ட் நிறுவனம் இதற்கான அனுசரணையை வழங்கியது. நுவரெலிய க்ரேண்ட் ஹோட்டலின் தலைமை சமையல் நிபுணர் விராஜ் ஜயரத்தனவின் தலைமையில் 50 சமையல் கலைஞர்கள் 3 நாட்களை செலவிட்டு இக்கேக்கினை தயாரித்துள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் தலைமை சமையல் கலைஞர் விராஜ் வழங்கிய வாளின் உதவியுடன் இக்கேக் வெட்டப்பட்டது. இலங்கை சுற்றுலா அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க நுவரெலிய நகர மேயர் சந்திரலால் கருணாரத்ன கிரேண்ட் ஹோட்டலின் பொதுமுகாமையார் ரிஷான் ரெஷின் உட்பட பலர் கலந்துகொண்டனர். இவ் வைபவத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் கட்டணம் அறவிடப்படாமல் இக்கேக் ருசித்து மகிழும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY