SHARE

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள வழக்குகளை வவுனியாவிற்கு மாற்ற கோரியும் யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியது.

தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு அநுராதபுரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தகுந்த தீர்வை வழங்க வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் ஏனைய சகல அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இன்று காலை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணி யாழ் பலாலி வீதியின் ஊடாக சென்று நாவலர் வீதியில் உள்ள ஐநா உயர்ஸ்தானிகர்; அலுவலகத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாணவர்கள் கையளித்தனர். அதனை தொடர்ந்து இப்பேரணி யாழ். மாவட்ட செயலகம் வரை சென்று அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் வழங்குமாறு கோரி வடமாகாண ஆளுனரின் செயலாளர் பி.இளங்கோவன் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

LEAVE A REPLY