SHARE

சவுதியில் பணியாற்றும் போது பொய்க்குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த இலங்கை பிரஜையொருவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. வெலிமடை லந்தேகம பகுதியை சேர்ந்த மொஹமட் அசிம் போலிக்குற்றச்சாட்டில் சவுதியில் 3 மாதம் சிறைவாசம் அனுபவித்தார். தனது சிறைவாசம் முடிவடைந்ததன் பின்னர் நாடு திரும்பிய அவர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறையிட்டார். அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணைகளை முன்னெடுத்து வந்தது.

இதனை தொடர்ந்து மொஹமட் அசிமுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சவுதி எஜமானருக்கு எதிராக இலங்கைக்கான சவுதி தூதரகத்தின் மூலம் தனியான வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக மொஹமட் அசிமிற்கு 8 இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நஷ்டஈட்டு தொகை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து நேற்று மொஹமட் அசிமிடம் வழங்கப்பட்டது. இவ்வழக்கில் மொஹமட் அசிம் ஆஜராகவில்லையென்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். வெளிநாடடு வேலைவாய்ப்பு துறை மற்றும் நீதி அமைச்சர் திருமதி தலதா அதுகோரளவின் ஆலோசனையின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் சவுதியிலுள்ள இலங்கை தூதரகமும் இணைந்து இதனை முன்னெடுத்தது.

22339676_1141967935935061_771981877860537254_o

22339684_1141967932601728_7928108627310330677_o

LEAVE A REPLY