SHARE

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி பரீட்சை நிறைவு பெறும் வரை பிரத்தியேக வகுப்புகள் புலமைப்பரிசில் பரீட்சை செயலமர்வுகள் மாநாடுகள் போன்றவற்றை நடாத்துவது எதிர்பார்க்கும் வினாக்களை பிரசுரிப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்லியூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.எனவே இவ்வாறு தடை விதிக்கப்பட்ட விடயங்களை செய்வொருக்கு எதிராக பரீட்சைகள் சட்டத்தின் கீழ் கடுடமையான நடவடிக்கைகள் மேங்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்ததோடு முறைகேடாக விடயங்கள் இடம்பெற்றால் 119,1911 எனும் இலக்கங்களுக்கு அறிவிக்க முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY