SHARE

மயிலிட்டி பாடசாலை உட்பட மேலும் சில பகுதிகளை விடுவிப்பதற்கு படையினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ் மயிலிட்டி துறைமுகம் உட்பட 50 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்க்ப்பட்டதுடன் மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பகுதிகள் தேவாலயங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் உள்ள பகுதிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லையெனவும் அவற்றை விடுவிக்க வேண்டுமெனவும் இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கமைய ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பொன்று மயிலிட்டியில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட கட்டளை தளபதி தர்சன ஹெட்டியாராச்சி உட்பட இராணுவ அதிகாரிகள் இசசந்திப்பில் கலந்து கொண்டனர். தமது குடியிருப்புக்கள் விடுவிக்கப்பட்டால் அங்கு நிரந்தரமாக குடியேற முடியுமென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த கட்டளை தளபதி எழுத்து மூலமாக கோரிக்கைகளை முன்வைக்குமாறும் தாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த ராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஸ்வரன் மீனவர்களுக்கான வீட்டு திட்டம் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்க தாம் நடவடிக்கைகளை முன்னெடுககவுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY