SHARE

நான் உலக அழகி பட்டம் வென்று சினிமாவுக்கு வந்தேன். ஆரம்பத்தில் இங்கு கசப்பான அனுபவங்களே கிடைத்தன. டைரக்டர்களில் கேவலமானவர்களும் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.

ஒரு படத்தில் என்னை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கினார்கள். இரண்டு நாட்கள் அதில் நடித்தேன். மூன்றாவது நாள் டைரக்டர் என்னிடம் வந்து, “என்ன உடை அணிந்து இருக்கிறாய்?, இப்படி நடித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். உடம்பு முழுவதும் தெரிகிற மாதிரி உடை அணிந்து ஆபாசமாக நடித்தால்தான் பார்ப்பார்கள். நான் தைத்து தருகிற குட்டைப்பாவாடையை உடுத்திக்கொண்டு நடிக்க வா” என்று மோசமாக திட்டினார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டேன். அப்போது எனது பொருளாதார நிலைமை மோசமாக இருந்தது. ஆனாலும் தெரிந்தவர்களிடம் உடனடியாக பணம் திரட்டி அந்த படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விட்டு நடிக்க முடியாது என்று கூறி விலகி விட்டேன்.

சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இந்த துறையில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் வருகிறார்கள். அவர்களை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. இவ்வாறு பிரிங்கா சோப்ரா கூறினார்.


இணையம்

LEAVE A REPLY