SHARE

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான புத்திஜீவிகளை உருவாக்கிய தாயகத்தின் சிறப்பு பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகத்திற்கு 75 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு ஆண்டு முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் 1884ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு சபையில் இடம்பெற்றது. 1906ஆம் ஆண்டு சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம் தலைமையில் உருவாக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழக சங்கம் இலங்கையின் உயர்கல்வி நிறுவனமாக சிலோன் யுனிவர்சிட்டி கொலேஜ் ஆரம்பமாவதற்கு அடிப்படையாக அமைந்தது. பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டது. 1942ஆம் ஆண்டு பேராதெனியவில் 700 ஏக்கர் காணி இதற்கென சுவீகரிக்கப்பட்டது. அதன்பின்னர் அது 1700 ஏக்கராகவும் பின்னர் 2400 ஏக்கராகவும் அதிகரிக்கப்பட்டது. 1942ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகமாக அது உருவாகியது. 1950ஆம் ஆண்டு வரை கொழும்பில் நடத்தப்பட்ட இப்பல்கலைக்கழகம் 1952ஆம் ஆண்டு பேராதனையில் ஏற்படுத்தப்பட்டது. இதன் முதலாவது உபவேந்தராக சேர் ஐவோஜெனிங்ஸ் நியமிக்கப்பட்டார். பேராதனை பல்கலைக்கழகம் பல கட்டடங்களை கொண்ட பல்கலைக்கழக கிராமமாக இன்று மிளிர்கின்றது.

LEAVE A REPLY