அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் ஜப்பான் பிரதமர் சின் ஷோ அபேவை சந்திக்கவுள்ளார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ட்ரம்ப் ஜப்பான் பயணிக்கவுள்ள நிலையில், எதிர்வரும் 26ம் திகதி இருநாட்டு தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.