Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மஹேந்திர சிங் டோனிக்கு அபராதம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 15:36

மஹேந்திர சிங் டோனிக்கு அபராதம்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை காரணமாக போட்டி கட்டணத்திலிருந்து 50 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் போது ஒரு நடுவர் நோபோல் என அறிவித்த பந்தை மற்றைய நடுவர் இல்லையென குறிப்பிட்டார்.

இதனால் மஹேந்திர சிங் டோனி மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் ஐ.பி.எல்.விதிமுறைகளை மீறியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இறுதி பந்தில் வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது.

பென்ஸ் ஸ்டொக்ஸ் 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் ஜடேஜா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு 152 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அவரே ஆட்டநாயனாகவும் தெரிவானார்.

இதேவேளை ஐ.பி.எல். தொடரின் 26 வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் டெல்லி கெப்பிட்டல் அணியும் மோதவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 15:36
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க