Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போர் நடத்தும் முனைப்புடனேயே இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 14:37

போர் நடத்தும் முனைப்புடனேயே இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

தமது நாட்டின் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. புலனாய்வு தகவல்களுக்கமைய இம்மாதம் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நிர்வாக பிரதேசத்தின் மீது படை நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய திட்டமிட்டுள்ளமை குறித்து தெரியவந்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியா தமது நாட்டின் மீது யுத்தம் நடத்துவதில் முனைப்பாக இருப்பதாக பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது. இருநாடுகளுக்குமிடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற நோக்கம் மேலும் பாதிப்புக்களையே ஏற்படுத்துமென பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மெஹ்மூட் குரேஷி தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருநாட்டு இராணுவத்தினரும் அதிகளவில் நிலைகொண்டுள்ளனர். தாக்குதல் அச்சம் காரணமாக தமது நாட்டு எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களை வேறு பகுதிகளிலில் குடியமர்த்தவும் பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 14:37
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க