Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குளவித்தாக்குதல்-36 பேர் வைத்தியசாலையில்

shukrymjm
By shukrymjm ஏப்ரல் 8, 2019 18:08

குளவித்தாக்குதல்-36 பேர் வைத்தியசாலையில்

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 35 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள், கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று பி.ப. 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தேயிலை மரத்தில் இருந்த குளவி  கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட 36 பேரும் கொட்டகலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

shukrymjm
By shukrymjm ஏப்ரல் 8, 2019 18:08
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க