Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையான ரயில் பாதை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது

shukrymjm
By shukrymjm ஏப்ரல் 8, 2019 08:59

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையான ரயில் பாதை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையான ரயில் பாதை இன்று திறக்கப்பட உள்ளது.

இதனுடன் தொடர்புடைய பிலதுவ, வெஹரஹேன, கெக்குணதுற, வம்பருந்த, வெவுறுகன்னல மற்றும் பெலியத்த ரயில் நிலையங்களும் திறந்து வைக்கப்பட உள்ளன.இததொடர்பான நிகழ்வில் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்

27 கிலோ மீற்றர் தூரம் கொண்டதாகும் புதிய ரயில் பாதையில் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரெயில்கள் பயணிக்க முடியும். அத்துடன் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் இந்தப் பாதையில் பயணிக்கும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாத்தறை – பெலியத்த ரயில் நிகழ்ச்சி வேலைத்திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் பிரியந்த தீகல தெரிவித்துள்ளார்.

மாத்தறை – பெலியத்த ரயில் பாதையின் முதலாவது ரயில் பயணம் இன்று 9.00 மணிக்கு மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.00 மணியிலிருந்து நேரசூசிக்கு அமைய ரயில் போக்குவரத்து இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று முற்பகல் 9 மணிக்கு இடம்பெறும் முதல் பயணத்தில் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

shukrymjm
By shukrymjm ஏப்ரல் 8, 2019 08:59
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க