Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் இரு ஒளடத தயாரிப்பு தொழிற்சாலைகள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 16:45

மேலும் இரு ஒளடத தயாரிப்பு தொழிற்சாலைகள்

மேலும் இரு ஒளடத தயாரிப்பு தொழிற்சாலைகளை அமைக்கும் நடவடிக்கை இன்று முற்பகல் ஆரம்பமானது. அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நாட்டுக்கு தேவையான மருந்துகளை தேசிய தொழிற்சாலைகளிலிருந்தே பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்கமைய வெளிநாட்டு முதலீடுகளுடன் குறித்த இரு தொழிற்சாலைகளை அமைக்கும் நடவடிக்கை துரிதகதியில் நிறைவடையுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஹங்கேரி நாடு, குறித்த இரு தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கென 15 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது. 2020ம் ஆண்டளவில் இதன் உற்பத்தி நடவடிக்கை ஆரம்பமாகுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஏற்கனவே கண்டி, ஹொரண, இரத்மலானை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான 6 மருந்து தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 16:45
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க