Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளொன்றுக்கு 3 மணித்தியாலங்களுக்கு மேல் தொலைக்காட்சியை பார்வையிட்டால் சுகாதார பிரச்சினைகள் : ஆய்வில் தகவல்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 1, 2019 15:31

நாளொன்றுக்கு 3 மணித்தியாலங்களுக்கு மேல் தொலைக்காட்சியை பார்வையிட்டால் சுகாதார பிரச்சினைகள் : ஆய்வில் தகவல்

நாளொன்றுக்கு மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் தொலைக்காட்சியை பார்வையிடுவதனூடாக சுகாதார பிரச்சினைகள் ஏற்படக்கூடுமென ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் விசேட நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பெரியவர்களே இதில் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. 50 வயதுக்கும் மேற்பட்ட 3 ஆயிரத்து 500 பேரை கொண்டு ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. நாளாந்தம் மூன்றரை மணித்தியாலத்திற்கும் மேல் தொலைக்காட்சியை பார்வையிட்டால் ஞாபகசக்தி குறையும் சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தலைவலி உள்ளிட்ட மேலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகளவில் உள்ளதாக அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 1, 2019 15:31
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க