நைஜீரிய ஜனாதிபதி தேர்தலில் முஹம்மது புஹாரி வெற்றிபெற்றுள்ளார். 76 வயதான முஹம்மது புகாரி எதிர்வரும் 4 வருடங்களுக்கு நைஜீரியாவின் ஜனாதிபதியாக பதவிவகிக்கவுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் துணை ஜனாதிபதி அட்டிக் அபூபக்கரை விட 4 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் புஹாரி வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவுகளை முன்னாள் துணை ஜனாதிபதியின் கட்சி நிராகரித்துள்ளது. இதனிடையே சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான எவ்வித சம்பவங்களும் பதிவாகவில்லையென தெரிவித்துள்ளனர். இதேவெளை நடைபெற்ற தேர்தலில் 35 வீதமானவர்களே வாக்களிப்பில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.