விமானத்துடன் மாயமான கால்பந்து வீரர் எமிலியானோ சலாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் சலா பயணம் செய்த விமானம் மயாமனதையடுத்து அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த விமானம் ச்சனல் தீவுக்கு அருகே திடீரென காணமல் போனதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை காணமல்போன விமானம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த விமானத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த சடலம் மீட்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இந்நிலையில் சடலம் கால்பந்து வீரர் எமிலியானோ சலாவினது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.