Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரத்துபஸ்வெல சம்பவம் குறித்த வழக்கு விசாரணைக்கு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2019 13:42

ரத்துபஸ்வெல சம்பவம் குறித்த வழக்கு விசாரணைக்கு

வெலிவேரிய ரத்துபஸ்வெலயில் குடிநீரைக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தி மூவர் படுகொலை செய்யப்பட்டும் மேலும் பலர் காயமடைந்த சம்பவம் குறித்த வழக்கு கம்பஹா மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குடிநீரை கோரி ஆர்ப்பாட்டம் செய்ய ரத்துபஸ்வெல மக்கள் மீது 2013 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மூவர் கொல்லபட்டும் மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பிரிகேடியர் தேசபிரிய குணவர்த்தன உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவர்கள் கம்பஹா மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்காமையினால் இவ்வழக்கை ஏப்ரல் 5 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2019 13:42
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க