Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹட்டன் டிக்கோயா குடியிருப்புத்தொகுதியில் தீ விபத்து : 24 வீடுகள் முற்றாக சேதம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 14:08

ஹட்டன் டிக்கோயா குடியிருப்புத்தொகுதியில் தீ விபத்து : 24 வீடுகள் முற்றாக சேதம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா பகுதியில் குடியிருப்புத்தொகுதியொன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. போடைஸ் 30ம் இலக்க தோட்டத்தின் 4ம் இலக்க குடியிருப்புத்தொகுதியில் ஏற்பட்ட தீயினால் 24 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இன்று காலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீடுகளிலிருந்த உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள், ஹட்டன் பொலிஸார், நோர்வூட் பிரதேச சபை மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீயணைப்பு பணிகளுக்கு நுவரெலிய தீயணைப்பு படையினரும் அழைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தீயினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் போடைஸ் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் மற்றும் அம்பகமுவ பிரதேச அலுவலகம் ஆகியன முன்னெடுத்துள்ளன. தீயினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை மதிப்பிடப்படவில்லை. தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லையென ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 29, 2018 14:08
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க