Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடு முழுக்க கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்

shukrymjm
By shukrymjm டிசம்பர் 25, 2018 13:05

நாடு முழுக்க கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்

யேசு பாலகனின் பிறப்பான நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் நேற்றைய தினம் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் குருநகர் புனித மரியன்னை ஆலயத்தில் யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன் போது ஆலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ள யேசு பாலகனின் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடி ஆயர் அவர்களினால் ஒளியேற்றப்பட்டு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. தற்போது வட மாகாணத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சக உறவினர்களுக்காக விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், நாட்டில் வாழும் சகல மக்களும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ பிறந்துள்ள யேசு பாலகன் வழிகோல வேண்டி விசேட ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நத்தார் நள்ளிரவு திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு யேசு பாலகனின் பிற்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.

வவுனியா குடியிருப்பு இலங்கை திருச்சபை புனித ஆவியானவர் ஆலயத்தில் நத்தார் விசேட ஆராதனைகள் இடம்பெற்றது. ஆலயத்தின் பங்கு தந்தை தலைமையில் இடம்பெற்ற இவ்வாராதனைகள் இரவு 11.30கு ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்றன. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு நத்தாரை வரவேற்றதுடன், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் யேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனைகள் சகல கிறிஸ்மஸ் தேவாலயங்களிலும் சிறப்பான இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நள்ளிரவு ஆராதனை மட்டக்களப்பு புளியந்தீவு இணை போராலயத்தில் மட்டு, அம்பாறை மரைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. யேசு பாலகன் இறை தூதுர் தேவதைகளினால் மறைமாவட்ட ஆயருடன் இணைந்து மாட்டு தொழுவத்தில் நள்ளிரவு 12 மணியளவில் அவரது பிறப்பை குறிக்கும் வருகையை எடுத்துக்காட்டும் வகையில் வழிபாடுகள் இடம்பெற்றன. இங்கு நத்தார் கீதங்கள், ஆராதனைகள் இடம்பெற்றமையை தொடர்ந்து யேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் ஆசி உரையை மரை மாவட்ட ஆயர் நிகழ்த்தினார். பின்னர் தேவ நட்கருணை ஆராதனையும் திருப்பலியும் இங்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. இவ்வாலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு வழிபாடுகளை மறை மாவட்ட ஆயருடன் இணைந்து மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை சி.அன்னதாஸ் அடிகள் மற்றும் இவ்வாலய பங்கு தந்தை தேவதாசன் அடிகள் ஆகியோர் நள்ளிரவு ஆராதனைகளை நடத்தினர். இதில் நாட்டில் நிரந்தர சமாதானம் நிலவ வேண்டி விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதேநேரம் மட்டக்களப்பு சின்ன உப்போடை புனித லூர்த்து அன்னை ஆலயத்தில் கிறிஸ்மஸ் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை போல் சட்குணநாயகம் அடிகளார், அருட்தந்தை அனஸ்டி அடிகளார் இணைந்து இந்த திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். யேசு பிறப்பினை கொண்டாடும் வகையில் பல்வேறு பரிசு பொருட்களும் சிறுவர் சிறுமியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று அன்னை ஆரோக்கியமாதா தேவாலயத்தில் நள்ளிரவு இடம்பெற்ற நத்தார் தின வழிபாடுகளில் அதிகளவான தேவ அடியார்கள் கலந்து கொண்டனர். தேவாலய பங்கு தந்தை அருட்திரு ஜூட் நிக்கலஸ் அடிகளார் நத்தார் தின விசேட ஆராதனை வழிபாடுகளை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து அருட்திரு டெவின் கூன்ஞே அடிகளார் நத்தார் தினத்தின் முக்கியத்துவம் பற்றி பிரசங்கம் நிகழ்த்தினார். இறுதியாக நட்கருணை வழிபாடு மற்றும் திருப்பலி பூஜை ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், திருவிருந்து வழிப்பாடுடன் இறையாசியோடு வழிபாடுகள் நிறைவு பெற்றன. இதில் பெருந்திரளான தேவ அடியார்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை ஆழையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அலிகம்பை தேவ கிராமத்தில் ஒளிவிழா நிகழ்வுகள் நேற்று முன்தினம் இரவு சிறப்பாக இடம்பெற்றன. அலிகம்பை புனித பிரான்ஸில் சவேரியர் தேவாலயத்தின் பங்கு தந்தை அருட்தந்தை சூசை நாயகம் அடிகளார் தலைமையில் தேவாலய அரங்கில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பா.உ கவிந்திரன் கோடிஷ்வரனும் கலந்து கொண்டார். சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, கிராமத்தில் வளர்ச்சியில் பங்காற்றிய அனைத்து துறைகளையும் சேர்ந்தவர்கள் தேவகிராம மக்களினால் கௌரவிக்கப்பட்டனர்.

 

shukrymjm
By shukrymjm டிசம்பர் 25, 2018 13:05
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க