Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தோனேசியாவில சுனாமி-168 பேர் பலி, 745 பேர் காயம்

shukrymjm
By shukrymjm டிசம்பர் 23, 2018 15:08

இந்தோனேசியாவில சுனாமி-168 பேர் பலி, 745 பேர் காயம்

இந்தோனேசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 168 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 745 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால் நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான் நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.

பன்தேக்லங்இ தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இருவரைக் காணவில்லை என்றும் பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

bbc

shukrymjm
By shukrymjm டிசம்பர் 23, 2018 15:08
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க