Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று பதவி பிரமாணம்

shukrymjm
By shukrymjm டிசம்பர் 21, 2018 20:56

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று பதவி பிரமாணம்

இன்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் 3 பேரும்,17  இராஜாங்க  அமைச்சர்களும்,7 பிரதியமைச்சர்கசிலர் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக ஜே. சி. அலவத்துவள நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக  அஜித் பி பெரேரா  நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சராக  ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சராக எரான் விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக  புத்திக பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக  அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய விவகாரங்கள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக நிரோஷன் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

விஞ்ஞான தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சராக சுஜீவ சேனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச வர்த்தக துறை பிரதியமைச்சராக நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சராக சம்பிக்க பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

விவசாய மீன்பிடி கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எஸ்.எஸ்.அமீரலி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

shukrymjm
By shukrymjm டிசம்பர் 21, 2018 20:56
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க