Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 14:05

மழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம்

மழையுடன் கூடிய காலநிலையில் எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. நாடு முழுவதும் சீறான வானிலையும் ஓரளவு குளிரான காலநிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உரைப்பனி உருவாக கூடிய சாத்தியகூறுகள் காணப்படுவதாகவும் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை மற்றும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பாக்கப்படுவதுடன் எதிர்வரும் 20 திகதி முதல் வானிலையில் மாற்றங்கள் எதிர்பார்க்கபடுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேலையில் துகள் உரை பனி உருவாகக்கூடிய சாத்தியம் ஓரளவு காணப்படுகிறது அத்துடன் நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனி மூட்டத்துடனான காலநிலை எதிர்பார்க்கப்படுவதோடு நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழை அற்ற காலநிலை எதிர்பார்க்கபடுகிறது. காங்கேசன்துறை முதல் புத்தளம் ஊடக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வட மேற்கு திசைகளில் இருந்து வீசுவதுடன் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பரப்புகளில் வடக்கு முதல் வட கிழக்கு வரையான திசைகளில் இருந்து வீசகூடும். நாட்டை சூழ உள்ள கடல் பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 20-30கும் இடைப்பட்ட கிமீ காணப்படும்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 14:05
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க