50 ஆயிரம் கிலோகிராம் அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. கோல்ட் ரைஸ் என குறித்த அரிசி தொகைக்கு பெயரிடப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் அரிசிக்கான விலைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சிவப்பரிசி ஒரு கிலோகிராம் 83 ரூபாவிற்கும், நாட்டரிசி ஒரு கிலோகிராம் 86 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுமென நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் உபாலி மொஹட்டி தெரிவித்துள்ளார். அதற்கமைய சதோச மற்றும் முன்னணி அரிசி விற்பன்னர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.