Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனது மூன்று பிள்ளைகளை கவனிக்காத தாயொருவருக்கு விளக்கமறியல்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 7, 2018 15:18

தனது மூன்று பிள்ளைகளை கவனிக்காத தாயொருவருக்கு விளக்கமறியல்

தனது மூன்று பிள்ளைகளை கவனிக்காத தாயொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொத்துவில் கிராமத்தை சேர்ந்த குறித்த மூன்று பிள்ளைகளும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கேட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அவர்களில் 7 வயதான பெண் பிள்ளை மற்றும் 13 மற்றும் 14 வயதான ஆண் பிள்ளைகளும் அடங்குகின்றனர். குறித்த பிள்ளைகளின் தந்தை அவர்களை விட்டுச்சென்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. தாய் தங்களுக்கு உணவு வழங்குவதில்லையென பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். பின்னர் பொலிஸார் பிள்ளைகளுக்கு உணவு பெற்றுக்கொடுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட பிள்ளைகளின் தாய் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவர்கள், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பாதுகாப்பின் கீழ் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 7, 2018 15:18
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க