Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

shukrymjm
By shukrymjm டிசம்பர் 6, 2018 20:49

இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் செயற்படுத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவு நாளை மறுநாள் வரை நீடீப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவு நாளை மறுநாள் வரை நீடீக்ககப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, மூன்றாவது நாளாகவும் இன்றும் விசாரிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் மனு விசாரிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் சட்டமா அதிபர் விளக்கமளித்தார். இன்றைய தினம் இடை மனுதாரர்களாக ஆஜரான பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சார்பில் விளக்கமளித்த ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, அரசியலமைப்பின் 62 இல் இரண்டு பிரிவின் படி பாராளுமன்றத்தை உரிய காலத்திற்கு முன்னர் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்தார். ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டுமென, 19வது சீர்த்திருத்தத்தில் பிரபல்யம் வாய்ந்த அரசியல் வாக்கியமொன்றை உட்படுத்த யாப்பை தயாரித்தவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக, மனோகர டி சில்வா தெரிவித்தார். மற்றொரு இடை மனுதாரரான ஜகத் வெள்ளவத்தை சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி, அரசியலமைப்பில் 70 இல் ஒன்று பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள, ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான கால எல்லையை நிர்ணயிப்பது 62 இல் இரண்டு மற்றும் 33 இல் மூன்று எனும் பிரிவுகளுக்கு பொருந்துவதில்லையென, தெரிவித்தார். இதனால் 19வது சீர்த்திருத்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதிக்கு இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தை கலைப்பதில் எந்தவித தடையுமில்லையென, அலிசப்ரி வாதிட்டார். அத்துடன் உச்சநீதிமன்றம் இந்த சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பு தொடர்பாக வியாக்கியானம் வழங்கும்போது, மக்களின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் செயற்படுவது அவசியமென, அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு தேர்தலொன்றை வழங்குவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகுமென, அவர் சுட்டிக்காட்டினார். மற்றொரு இடைமனுதாரரான பேராசிரியர் சன்ன ஜயசுமன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாறபன, சட்டமா அதிபர் கூறியதை போன்று இவ்வடிப்படை உரிமை மனுவை ஆராய உச்சநிதிமன்றத்திற்கு அதிகாரமில்லையென தெரிவித்தார். அரசியலமைப்பில் 70 இல் ஒன்று பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் ஜனாதிபதிக்கு பாராளுமுன்றத்தை கலைப்பதற்கான வரையறைகள் 62 இல் இரண்டு மற்றும் 33 இல் இரண்டு சி பிரிவுகளின்படி பொருந்துவதில்லையென தெரிவித்தார். பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்த சகல சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதிக்கு 62 இல் இரண்டு மற்றும் 33 இல் இரண்டு சி பிரிவுகளின்படி பாராளுமன்றத்தை கலைக்க முடியுமென, தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக தடுக்கும் வகையில் உச்சநிதிமன்றம் கடந்த நவம்பர் 13ம் திகதி இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது. அந்த இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் 8ம் திகதி வரை அமுலில் இருக்கும். பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்களான புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட, முருது பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் மனு ஆராயப்படுகின்றது.

shukrymjm
By shukrymjm டிசம்பர் 6, 2018 20:49
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க